ஐபிஎல் 2022 : ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் இவரா?
ஐபிஎல் 15வது தொடர் ஆனது வருகிற மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணிகளை பற்றி அப்டேட்டை வழங்கி வருகிறது.
ஆனால் பெங்களூர் அணி இதுவரை கேப்டன் யார் என அறிவிக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் மூன்று சீனியர் வீரர்கள் இருப்பது தானாம். விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான லிஸ்டில் இருந்தனர்.

மூவரும் கேப்டன் -சியை பொறுத்தவரை நன்றாக கலக்க கூடியவர்கள் தான் ஆனால், கேப்டனாக எடுக்க தான் நீண்ட ஆலசோனை நடந்து வருவதாக நிர்வாகம் எடுத்து வந்தது.
இந்த நிலையில், டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச கேப்டன் பதவியில் டுபிளெசிஸ் உள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரிலும் நீண்ட அனுபவம் உள்ளது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.