ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட சிறுமி! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
சமையலுக்கு ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட 2ம் வகுப்பு குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட குழந்தை
ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி(50). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் 8ம் வகுப்பும், இளைய மகள் நிகிதா லட்சுமி (8) 2ம் வகுப்பும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நிகிதா, நேற்று மாலை சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை அதிகமாக எடுத்து சாப்பிட்டுள்ளார். உடனே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன், வாந்தியும் ஏற்பட்டதால் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சரியான வசதிகள் இல்லாததால் பெரிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதால், மகளை நேற்று இரவு குறித்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுது மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். குறித்த குழந்தையின் தாய் பரமேஸ்வரி கூறுகையில், ஒரே ஒரு நாள் மட்டும் காய்ச்சல், வாந்தி இருந்ததாகவும், அரசியை சாப்பிட்ட அவர் அடுத்து பிஸ்கட் சாப்பிட்டு தண்ணீர் குடித்ததாகவும், தற்போது எனது மகள் என்னை விட்டு சென்றுவிட்டார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.