நீரிழிவு நோயாளி பச்சை பப்பாளி காயை சாப்பிட்டால் என்ன நடக்கும்...இனி முழுசா தெரிஞ்சிக்கோங்க!
பப்பாளி காயை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு.
இது உண்மையா என்பது குறித்து சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
பப்பாளிப்பழத்தைக் காட்டிலும் காயாக இருக்கும் போது எடுத்துகொண்டால் அதில் அதிக பலன் கிடைக்கும்.
காயாக இருக்கும் பப்பாளியில் வைட்டமின்கள், புரதங்கள், பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் பப்பேன் மற்றும் சைமோபபைன், என்சைம்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது என்பது வதந்தி.
நீரிழிவு நோயை பச்சை பப்பாளி எப்படி கட்டுப்படுத்துகின்றது
பச்சை பப்பாளியில் பல முக்கியமான தாதுக்கள் உள்ளன.
பச்சை பப்பாளி உடலில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.
இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கவும் உதவும் தாதுக்கள் இதில் உள்ளது.
வகை 2 நீரிழிவு நோய்க்கு காரணமான முக்கிய நொதிகளுக்கு எதிராகவும் பச்சை பப்பாளி செயல்படும்.
இத்தகைய அற்புதங்களை கொண்ட பச்சை பப்பாளியை உணவில் சேர்த்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு
உணவுகள் விடயத்தில் அக்கரை செலுத்த வேண்டும் என்பதற்காக ஆரோக்கியாமான உணவுகளை நீரிழிவு நோயாளிகள் ஒதுக்க கூடாது. உணவே மருந்து என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே வேளை, ஆரோக்கியமான உணவு என்பதற்காக அதிகம் எடுத்து கொள்ள கூடாது. அதுவே பிரச்சினையில் முடிந்து விடும்.
எனவே அளவாக பச்சை பப்பாளியை உணவில் சேர்த்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள்.