யாரெல்லாம் மாங்காயில் மிளகாய் பொடி போட்டு சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டால் ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் மாங்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழங்கள் அதிகமாக விற்பனைக்கு இருக்கும்.
அப்படியொரு கடையில் மாம்பழம் அல்லாமல் இளம் பழம் மாங்காயை வாங்கி அதில் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து சாப்பிட்டாலே போதும்.
இளம் பழமாக இருக்கும் மாங்காய் மீது மிளகாய் தூள் போட்டு சாப்பிடும் போது அதன் வழமைக்கு மாறாக இரட்டிப்பாக இருக்கும்.
அத்துடன் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன.
அந்த வகையில் மாங்காயில் மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மாங்காயில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. மற்ற பழங்களோடு மாங்காயை ஒப்பிடும் போது சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளர்களும் மாங்காயை சாப்பிடலாம். அத்துடன் இரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.
2. பச்சை மாங்காயில் வைட்டமின் பி, நியாசின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அத்துடன் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது,
3. செரிமான பிரச்சினையுள்ளவர்கள் காரம் குறைவாக சேர்த்து மாங்காய் சாப்பிடலாம். ஏனெனின் மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான அமில ஆசிட் என்று சொல்லக்கூடிய செரிமான என்சைம் இருக்கிறது. இது செரிமான கோளாறுகளை கட்டுபடுத்தும்.
4. உடலில் நச்சு கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருந்தால் நாள்ப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது. மாங்காய் சாப்பிடுவதன் மூலம் நச்சுகள் வெளியேற்றப்பட்டு கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.
5. பச்சை மாங்காய் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் பிரச்சினையிலிருந்து விடுபெறலாம் என சொல்லப்படுகின்றது. அத்துடன் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுகளையும் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |