Mango: புற்றுநோயை தடுக்கும் மாங்காய் பச்சடி! அழகுக்கும் அழகு சேர்க்குமாம்
மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டுமாம் என்பது பழமொழி. முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாங்காயின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பச்சை மாங்காய் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது.
மாங்காயின் பயன்கள்
நம் நாட்டு மருத்துவத்தில் மாங்காய் சாப்பிடுவதால் பசி நன்கு எடுக்கும், நாருசியின்மை நீங்கும், வயிற்றில் உள்ள பூச்சிகள் விலகி பெருங்குடல் தூய்மை பெறும், மலச்சிக்கல் அறவே விலகும் என கூறப்பட்டுள்ளது.
தாதுக்களின் வலிமையைக் காக்கும் திறன் மாங்காய்க்கு உண்டு, மாங்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுமா என்று ஐயம் ஏற்படுகிறதல்லவா?
மாங்காயில் உள்ள சில சத்துப்பொருட்கள் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயினை வராமல் தடுப்பதாக டெனிஸ் பர்கிட் என்பவர் விஞ்ஞான சோதனை மூலம் நிரூபித்துள்ளார்.
எனவே மருந்தே இல்லை எனப்படும் புற்றுநோய் யுகத்தில் வாழும் நமக்கு மாங்காய் ஒரு தடுப்பு சாதனமாக பயனாகிறது. தொடர்ந்து மாங்காய் சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
மாங்காய் பச்சடியை இரண்டு வகைகளில் தயாரிக்கலாம், சிறு வில்லைகளாக அரிந்து வேகவைத்து பின் தாளிதம் செய்து உண்ணலாம் அல்லது துருவல் செய்து மோரில் கலந்து சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.
எனவே மாங்காய் சீசனில் அடிக்கடி மாங்காய் பச்சடி சாப்பிடுங்கள், அதனால் அபாயமான புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
பழுக்காத பச்சை மாங்காயில் மாங்கிஃபெரின் என்னும் தனித்துவமான ஆன்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகள், கொலஸ்டிரால் மற்றும் பிற கொழுப்பு அமிலங்களை சமநிலையில் வைக்கவும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றது.
மாங்காயில் இருக்கும் சத்துக்கள் தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. மேலும் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. தலைமுடியின் வேர்க்கால்களை வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
மாங்காயை அரைத்து ரோஸ்வாட்டருடன் கலந்து முகத்துக்கு பேஸ்பேக்காக பயன்படுத்தலாம் முகப்பரு பிரச்சினை இல்லாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |