ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை... யார்னு தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டதாக பிரபல நடிகை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தனது ஆசையை தற்போது வெளியே ஓபனாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
நடிகை மோகினி
தமிழ் சினிமாவில் கடந்த 1987ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை மோகினி.
பின்பு ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான இவர், நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல படங்களில் நடித்துள்ளார்.
2007ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மலையாள படமான கலெக்டர் என்ற படத்தில் 2011ம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசை
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்பு பேட்டி ஒன்றில் கூறப்பட்டுள்ள விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஆம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறியுள்ளார். நடிகை மோகினி ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவர் மீது வெறித்தனமான அன்பை வைத்துள்ள இவருக்கு வருத்தம் என்னவெனில், ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது தான்.

அப்பொழுது இவர் இந்துவாக இருந்துள்ளார். திலீப் என்று தான் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இருந்துள்ளது. அவர் திலீப்பாகவே இருந்திருக்கலாம் என்றும் அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால் தனது வீட்டில் பேசி அவரையே திருமணம் செய்திருப்பதாக கூறியுள்ளார்.
சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் திருமணம் செய்ய திட்டமிருந்ததாகவும் நடிகை மோகினி கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |