வாழைக்காயை வாயு என்று ஒதுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க
வாழைக்காயை வாயு என்று ஒதுக்கி வைக்கும் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இதுவாகும்.
வாழைக்காய்
அதிக மருத்துவ குணம் கொண்ட வாழை மரத்தின், இலை, பூ, காய், கனி, தண்டு என அனைத்தும் மனிதர்களுக்கு பயன்படுகின்றது.
வாழைப்பழத்தினை அதிகமாக விரும்பும் நாம், இதன் காயை அதிகமாக விரும்புவதில்லை. இதனை பொறியல், பஜ்ஜி, சிப்ஸ் செய்து சாப்பிடுவதுடன் அதிகமான நன்மையையும் அளிக்கின்றது.
வாழைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், கோலின், நார்ச்சத்து, ஃபோலேட், கொழுப்பு, மெக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ், பாந்தோதெனிக் அமிலம், நியாசின், பாஸ்பரஸ், புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், சோடியம், தயாமின், சர்க்கரை, வைட்டமின் சி, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன.
வாழைப்பழத்தினை சாப்பிடுவதற்கு இனி வாழைக்காயையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
image: South Cookery
நன்மைகள் என்ன?
நார்ச்சத்து அதிகமாக கொண்ட வாழைக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் குறைக்கின்றது. குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுவதுடன், அஜீரணம், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனையை குறைக்கின்றது.
வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் இதயத்தை பாதுகாக்கின்றது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன், உயர் ரத்த அழுத்த அபாயத்தையும், கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது. ஆதலால் வாழைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது.
வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், பசியையும் குறைப்பதால், உடல் எடையை குறைக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |