முதல் திருமண நாளன்று மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரவீந்தரின் ரிப்ளை!
முதல் திருமண நாளை மனைவியுடன் கொண்டாடும் ரவீந்தர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ரவீந்தர் - மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்
இந்த நிலையில் நேற்றைய தினம் ரவீந்தர் மற்றும் அவரின் மனைவி மகாலட்சுமி ஆகிய இருவரும் முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள்.
இதன்போது, தன்னுடைய மனைவி குறித்தும் அவர் ரவீந்திருடன் வாழும் வாழ்க்கை குறித்தும் ஒரு உருக்கப்பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், மகாலட்சுமி எப்படி அவருடன் நடந்து கொள்கிறார். அத்துடன் அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு இப்படி ஏகப்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் அவரின் பதிவிற்குள் கீழ் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |