இரண்டாவது மனைவியுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல இசையமைப்பாளர்!
2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் டி.இமான்.
இவரது இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக கூறப்போனால், கும்கி, ரம்மி, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் இவரது பாடல்கள் அனைவரையும் ஒரு நிமிடம் கிறங்க வைத்தது என்னவோ உண்மைதான்.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் இதுவரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசை வாழ்க்கை இவ்வாறு இருக்க, இவரது திருமண வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், கடந்த 2008ஆம் வருடம் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்தத் திருமணம் மூலமாக இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் எமிலி என்பவரை டி.இமான் அவர்கள் மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த வருடம் தனது முதலாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.