வாழ்க்கை இப்போது ரொம்பவே அழகாக இருக்குனு தெரிஞ்சுகிட்டேன்.... காதலுடன் ரொமான்ஸ் செய்யும் ஜோடி!
காதல் மனைவி மகாலட்சுமியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ரவீந்தர்-மகாலட்சுமி
தற்போது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அடிப்படும் பெயர்தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் பெயர் தான். தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி நாளடைவில் சீரியலில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த வேலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்ற போதும் எதை பற்றியும் கவலைப்படாமல் தனது ஆசை மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.
மனைவியுடன் ரொமான்ஸ்
திருமணமத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் வெளியில் சென்று ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள். தற்போது ரவீந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நம்ம வாழ்க்கைல நாம திரும்பத் திரும்ப பாக்குற முகங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
ஆனா நம்ம வாழ்க்கைல திரும்பத் திரும்ப நினைக்க நல்ல குணமுள்ள ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம். அப்படி ஒரு ஆள் கிடச்ச வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கும்னு நாங்க வாழ்றதுலதான் தெரிஞ்சுகிட்டோம்..” என காதலோடு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
இவரின் இந்தப் பதிவிற்கு பலரும் பலவிதமான கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |