விவாகரத்து சர்ச்சைக்கு ரவீந்திரன் வைத்த முற்றுப்புள்ளி! வைரலாகும் புகைப்படங்கள்
காதல் மனைவி மகாலட்சுமியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ரவீந்தர்-மகாலட்சுமி
தற்போது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அடிப்படும் பெயர்தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் பெயர் தான். தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி நாளடைவில் சீரியலில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த வேலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்ற போதும் எதை பற்றியும் கவலைப்படாமல் தனது ஆசை மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.
திருமணமத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் எங்கேயாவது சென்று ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இருவரும் ஜோடியாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சென்ற பொழுது எடுத்த புகைப்படத்தினை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.