மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ரவீந்தர் எங்கு சென்றார் தெரியுமா? ஷாக்கான ரசிகசர்கள்
ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி தனி விமானம் மூலம் ஹனிமூன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.
ஆனால் ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் ரவீந்தரின் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ, இனி துவங்கலாம் குலதெய்வத்தின் அருளோடு, நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி, நம்மை வெறுக்கும் உலகத்திற்கு மிக்க நன்றி, ஒருநாள் நாங்கள் உங்களை நேசிக்க வைப்போம், என்றும் உங்கள் ரவி, மிஸஸ் ரவி என ரவீந்தர் பதிவிட்டுள்ளார்.
அதாவது நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க வைத்துவிடுவோம் போன்ற இந்த பதிவை ரவீந்தர் போட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு தான் தனி விமானத்தில் செல்கிறார்கள் என்று நினைத்த நிலையில் குலதெய்வ வழிபாட்டுக்கு தான் சென்றுள்ளனர்.