ரவி மோகன் - கெனிஷா கோவாவில் என்ன பண்ணிருக்காங்க தெரியுமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ரவி மோகனுக்கும்கெனிஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்கும் நெருங்கிய நண்பர் மட்டுமே என ரவி மோகன் விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

ரவி மோகன் - கெனிஷா உறவில் மீண்டும் பரபரப்பு.
கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகனும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கோவாவில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதுடன் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து போதைப்பொருள் புனைக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த காணொளியைத் தொடர்ந்து சில ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
I stood up for Jayam Ravi when the divorce news broke because I genuinely believed his side. But seeing videos of him is a reality check. Disappointed to see how things are turning out definitely lost respect for him.
— Sundar Vijay (@ItsSundarVJ) September 6, 2026
Day by day Ravi 🤒 pic.twitter.com/cjwTaoL9x4
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |