மனைவியுடன் விவாகரத்து- பட்டுவேட்டி சட்டையில் ரவி மோகன்.. மீண்டும் கிளம்பிய சர்சை
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரவியும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸூம் ஜோடியாக வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ஜெயம் ரவிக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதற்கு பதில் கொடுத்த ஆர்த்தி"விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்'' என கூறியிருந்தார்.
இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
கெனிஷாவுடன் வந்த ரவி மோகன்
இந்த நிலையில், விவாகரத்து வழக்கு ஒரு பக்கமாக சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண நிகழ்ச்சிக்கு ரவி, தனது தோழியுடன் ஒரே நிற ஆடையில் வருகை தரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்திற்கும் கெனிஷாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பேசிய ரவி, தற்போது திருமணத்தில் ஜோடியாக இருக்கும் காட்சியை பார்த்த இணையவாசிகள் காட்சியை வைரலாக்கி வருகிறார்கள்.
#RaviMohan at #VelsWedding 💥 #IshariGanesh pic.twitter.com/N6shdobkKL
— VCD (@VCDtweets) May 9, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |