சாய் பல்லவி பிறந்த நாளுக்கு தங்கை கொடுத்த சர்ப்ரைஸ்- நினைவுகளை ஒன்றாக்கிய தருணம்
நடிகை சாய் பல்லவி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக அவருடைய தங்கை பகிர்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.
மேலும் பிரபல டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பு, நலினம் கொண்ட நடனம் இப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமாகும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடிகையாக சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
பிறந்த நாள் சர்ப்ரைஸ்
இந்த நிலையில் சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் சரியானதொரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகிய பூஜா, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் பகிர்ந்து கொண்ட அழகிய தருணங்களை காணொளியாக்கி அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் சாய் பல்லவிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருவதுடன், “சாய் பல்லவி இவ்வளவு குறும்த்தனமானவரா?” என கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
