ஐபிஎல் வரலாற்றிலேயே அஸ்வின் செய்த முதல் சம்பவம் - ரிட்டயர்டு அவுட் விதிமுறை என்றால் என்ன?
நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். அதன்படி ஐ.பி.எல். வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் ஆவார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அஸ்வின் 18.2-வது ஓவரில் மைதானத்தில் இருந்து ‘ரிட்டயர்ட் அவுட்’ முறையில் வெளியேறினார். மேலும், அஸ்வின் முதலில் பெவிலியன் திரும்பியதற்கான காரணம் தெரியவில்லை.
பின்னர் தான் அவர் ஓய்வு முறையில் வெளியேறிய தகவல் வெளியானது. அஸ்வினின் இந்த அதிரடியான முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணமாக அஸ்வின் தொடர்ந்து ரன்களை அதிரடியாக குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
மேலும் சோர்ந்து போயும் இருந்தார். பெரிய ஷாட்களை அடிப்பது கஷ்டம் என தெரிந்துதான் அவர் இடத்டதில் ரியான்பராக் களம் இறங்கி உள்ளார்.’ போட்டி முடிவடைந்த பின்னர், கேப்டன் சஞ்சு சாம்சன் பதிலளிக்கையில், அஸ்வின் சிறந்த கிரிக்கெட் உணர்வு கொண்டவர். சூழ்நிலைகளை நன்றாக கணக்கிடுவார்.
இந்த போட்டி தொடருக்கு முன்பு ஏதேனும் சூழ்நிலை ஏற்பட்டால் ‘ரிட்டயர்ட் அவுட்’டை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இது அணியின் முடிவாகும் எனத்தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டியில் ரிட்டயர்ட் முறையில் வெளியேறுவது இதுதான் முதல் முறையாகும். அஸ்வின் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்.
விஜய் மகன் சினிமாவுக்கு வருவது எப்போது? பதறியப்படியே பேசிய தளபதி விஜய்!

ரிட்டயர்டு அவுட் என்றால் என்ன?
ரிட்டயர்டு அவுட் என்ற விதிமுறையை எடுக்க வேண்டுமெனில் போட்டியின்போது பேட்ஸ்மேன்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ரன் குவிப்பில் தொய்வு ஏற்படும்போதோ அல்லது அடுத்த பேட்ஸ்மேனை களமிறக்க விரும்பினாலோ இந்த ரிட்டயர்ட் அவுட் என்ற விதிமுறையை பயன்படுத்தலாம்.
மேலும், வழக்கமாக ரிட்டையர்ட் ஹர்ட் என்ற விதிமுறையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் நீங்கள் காயத்தினால் அல்லது தனிப்பட்ட காரணத்தினால் ரிட்டையர்டு ஹர்ட் ஆகும்போது மீண்டும் விக்கெட் விழுந்த பின்னர் வந்து பேட்டிங் செய்யலாம்.
ஆனால், ரிட்டயர்ட் அவுட் என்கிற இந்த விதிமுறையை கையிலெடுக்கும் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாது. அவர்கள் ஆட்டமிழந்துவிட்டனர் என்றே அர்த்தம்.
அப்படி இந்த ரிட்டயர்டு அவுட் என்ற விதிமுறையை எடுத்த முதல் நபராக அஸ்வின் தற்போது மாறியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இந்த விதிமுறை இருந்தாலும் பெரிய அளவில் யாரும் செய்ததில்லை. தற்போது தான் அஸ்வின் முதல் முறையாக செய்துள்ளார்.