சத்துக்களை அள்ளித்தரும் ரவை ஓட்ஸ் கீரை அடை: செய்வது எப்படி?
தாய்மார்களின் அவசர நண்பன் என ரவையை குறிப்பிடலாம், வெறும் 10 நிமிடத்தில் உப்புமா செய்து அசத்தி விடுவார்கள்.
முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சத்துக்களை அள்ளித்தருகிறது ரவை, இதில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது.
விட்டமின் பி, போலேட் மற்றும் தயமின் உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
அப்படிப்பட்ட ரவையை தான் நாம் வெறுத்து ஒதுக்குகிறோம், இதில் மிக சூப்பரான ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையானவை
ரவை - முக்கால் கப்
ஓட்ஸ் - அரை கப்
கோதுமைமாவு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சைமிளகாய் - 3 அல்லது 4 (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கீரை - ஒரு கப்
சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை
ரவையை லேசாக எண்ணெய் விட்டு வறுக்கவும். ஓட்ஸையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மாவு அதிக தண்ணீரை இழுத்து கெட்டியாகி விட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.
கல் காய்ந்ததும், மாவை தடியாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் சத்தான ரவை ஓட்ஸ் கீரை அடை தயார்!

10 நிமிடத்தில் மொறு மொறு மெதுவடை