மா அரைக்காமல் இனி தோசை சூடலாம்! அதற்கு ரவை மட்டும் போதுமா? வாங்க பார்க்கலாம்
பொதுவாக சிலருக்கு காலையில் தோசை செய்தால் மிகவும் பிடிக்கும்.
இதற்காக காலையில் எழுந்து மா அரைத்து அம்மாமார்கள் கஷ்டப்படுவார்கள்.
ஆனால் மா அரைக்காமல் ரவை வைத்து தோசைக்கு மா கரைக்க தெரியுமா?
இது எப்படி கரைக்கலாம் என்பதனை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - முக்கால் கோப்பை
அரிசி மாவு - கால் கோப்பை
கோதுமை ரவை - அரை கோப்பை
புளித்த மோர் - ஒரு கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் நமக்கு தேவையான ரவையை எடுத்து அதனை மிதமாக சூட்டில் வைத்து வறுத்து கொள்ளவும்.
பின்னர் தோசைக்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் இஞ்சியையும் நன்றாக தோல் நீக்கி துருவி வைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து தோசைக்கலவைக்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். (அரிசி மாவு, கோதுமை மாவு, வறுத்த ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை )
இவையனைத்தையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சுமார் 2 மணித்தியாலங்களுக்கு வைத்து விட்டு பின்னர் தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான ரவை தோசை தயார்!