இட்லி மாவு இல்லையா? 10 நிமிடம் போதும்.. மொறு மொறு தோசை தயாராகிவிடும்
பொதுவாகவே எல்லோருக்கும் புதிது புதிதாக ஏதாவது ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அப்படி ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உதவியாக இருக்கும்.
அருமையான ரவா தோசை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுக்காத ரவை - 1/2 கப்
அரிசி மா - 1/2 கப்
மைதா - 1/4 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - சிறிய துண்டு
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
நெய்/ எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
image - f for flavor
செய்முறை
முதலில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை கப் ரவை, அரை கப் அரிசி மா, கால் கப் மைதா சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இது நன்றாக தண்ணியாக இருக்க வேண்டும்.
15 நிமிடங்கள் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.
பின்பு மேலும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது மா தயாராகிவிட்டது.
பின்னர் தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இடையிடையே துவாரம் இருப்பது போல் தோசை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
மேலே மேலே சிறிது எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரண்டு பக்கமும் திருப்பிப் போட தேவையில்லை.
image - desert food feed