ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நெய்! யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
காலையில் தூங்கி எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும்.
சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது.
நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நெய் மிக அதிக அளவில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு வைட்டமின் ஏ நிறைந்தது. பிட்யூ்ரிக் அமிலம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் என்றால் அது நெய் தான். மேலும் இதில்,
அதேபோல நெய்யில் வைட்டமின், ஈ மற்றும் டி அதிக அளவில் இருக்கிறது. அதோடு மிக சில உணவு வகைகளில் மட்டுமே இருக்கிற லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிக அளவில் இருக்கிறது.
1 டீஸ்பூன் நெய்யில் கிட்டதட்ட 112 கலோரிகள் இருக்கின்றன.
அதோடு மொத்த கொழுப்பின் அளவு - 14 கிராம்.
புரதம் - 0.04 கிராம்
வைட்டமின் ஏ - 438 IU
வைட்டமின் டி - 15 மி.கி
வைட்டமின் கே - 1.2 மி.கி
கோலின் சத்து - 2.7 மி.கி
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் - 45 மி.கி
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் - 2.7 மி.கி
யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?
செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி வரும் உணர்வு, கல்லீரல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னை இருப்போர் தவிர்க்க வேண்டும்.
அதே போல பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு சேர்க்கக் கூடாது.
இரண்டிலும் கொழுப்பு அதிகம் என்பதால் செரிமானமாக தாமதமாகும்.