ரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க
ரேஷன் அரிசியில் மிகவும் பஞ்சு போன்ற இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இட்லி
பொதுவாக தென்னிந்திய மக்களின் காலை உணவு எது என்றால் இட்லி, தோசை என்றே கூறுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கின்றது.
அவித்து உணவு என்பதால் செரிமான பிரச்சனை வராமல் நன்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதில் சேர்க்கப்படும் உளுந்து உடம்பிற்கு பலத்தை அளிக்கின்றது.
குறிப்பாக தமிழக மக்கள் இட்லிக்கு ரேஷன் அரிசியினை அதிகமாக பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்து அரைக்கும் மாவில் இட்லி பஞ்சு மாதிரி வந்தால் மட்டுமே திருப்தியாக இருக்கும்.
இட்லி பஞ்சு மாதிரி வருவதற்கு ரேஷன் அரிசியில் என்னென்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி- 3 டம்ளர்
ரேஷன் பச்சை அரிசி- 1 டம்ளர்
உளுந்து- ஒரு டம்ளர்
வெந்தயம்- சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் இரண்டு அரிசியினை நன்றாக கழுவி அதனுடன் வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இதே போன்று உளுந்தையும் நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய உளுந்தை அப்படியே பாத்திரத்துடன் ப்ரீஸரில் வைத்துவிடவும். கிரைண்டரில் அரிசியை சேர்த்து ரவை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை பாத்திரம் ஒன்றில் மாற்றிவிட்டு, பின்பு ப்ரீசரில் வைத்த உளுந்தை எடுத்து கிரைண்டரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அரிசி மாவுடன், உளுந்த மாவையும் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுமார் 8 மணி நேரம் வெளியே வைத்து புளித்த பின்பு இட்லி ஊற்றினால், பஞ்சு போன்ற இட்லி தயார்.
ப்ரீசரில் உளுந்தை வைக்காமல் இருந்தால், அரைக்கும் போது கிரைண்டர் சூடாகாமல் இருப்பதற்கு சில ஐஸ் கட்டிகளை உள்ளே சேர்த்து அரைக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |