நுதனமாக திருடும் எலி: சிசிடிவியில் வசமாக சிக்கிக்கொண்ட காட்சி! வைரலாகும் வீடியோ
நகைக்கடையில் உள்ள நகையை நுதனமாக திருடி எடுத்துச்செல்லும் எலி தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
நகையை திருடிய எலி
கேரளா மாநிலத்தில் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நெக்லெஸ் ஒன்று காணாமல் போயிருந்தது.
நகையைக் காணாமல் போயுள்ளதை அறிந்துக்கொண்ட நகைகடை ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள்.
அப்போது இரவு வேளைகளில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று நகையை மெதுவாக வாயால் தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இவ்வாறு நகையை திருடி எடுத்துக்கொண்டு செல்லும் காட்சியை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ எலி திருடர்கள் கவனம் என பெரும் வைரலாக பரவி வருகிறது.