என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை - வைரல் சிறுமிக்கு விருந்து வைத்த Virosh தம்பதி
விஜய் தேவர்கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வீடியோ பகிர்ந்த சிறிமியை அழைத்து விருந்து வைத்த Virosh தம்பதி பற்றி பதிவில் பார்க்கலாம்.

Virosh தம்பதி
சமீபத்தில் லக்கி என்ற சிறுமி ரஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் தேவர்கொண்டா தங்களுடைய திருமணத்திற்கு அந்த சிறுமியை அழைக்கவில்லை என்று ரீல்ஸ் போட்டிருந்தார்.
இது இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், "நாமும் ரசிகர்கள் தானே, எங்களை அழைத்திருக்கலாம்" என்று மழலை மொழியில் அவள் கூறியது பலரையும் கவர்ந்தது.

இந்த ரலஸ குறித்து விஜய் தேவரகொண்டா கவனத்திற்கு சென்றதும், அவர் உடனடியாக பதிலளித்து, "உனக்கு என்ன பிடிக்கும் என்று சொல், உனக்குப் பிடித்ததை எல்லாம் வீட்டிலேயே ஏற்பாடு செய்கிறோம்" என்று கூறினார்.
மேலும், அந்த சிறுமியை நேரில் சந்திக்க தனது வீட்டிற்கே அழைத்தார். அதன்படி, ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவர்கொண்டா வீட்டில் நேற்று சிறுமியை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா சந்தித்தனர்.
இருவரும் சிறுமிக்கு பிரத்தியேகமாக விருந்து கொடுத்து அன்புடன் பேசியும் மகிழ்ந்தனர். மேலும், சிறுமியுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றும் பதிவு செய்திருந்தனர். இந்த சந்திப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.