ராஷ்மிகா திருமண புகைப்படத்தை leaf art செய்த ரசிகர்! out put எப்படி இருக்குன்னு பாருங்க
ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படத்தை அச்சு அசல் அப்படியே leaf art செய்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், அசுர வேகத்தில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்தது.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன் நடைபெற்றது. அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் குறுகிய நாட்களில் அதிக லைக்குகளை பெற்று ஆசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படத்தை அச்சு அசல் அப்படியே leaf art செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |