ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் புதிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் அவர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.அவர்கள் திருமணத்தை இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதனால் இந்த தம்பதியினரும், தங்களது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் உடனும் தங்களின் திருமணத்தின் மகிழ்சியை கொண்டாட வேண்டும் என தொடர்ந்தும் வித்தியாசமான சில விஷயங்கள் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் முக்கிய கோவில்களில் அன்னதானம் செய்தனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர்கள் மக்களுக்கு இனிப்பு விநியோகம் செய்த காணொளியும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட் பிரிவில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனது தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகைகளை அறிவித்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் இந்த தம்பதியினருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
Vijay Deverakonda starting Scholarship Scheme for 9th &10th class students from this year 💥
— 𝗧𝗛𝗘 𝗬𝗔𝗗𝗔𝗩 (@theyogayadav) March 2, 2026
Great idea which helps students for their future education without any financial struggle
Vijay Deverakonda ❌
VIjay BANGARUKONDA ✅#VijayDeverakonda #Ranabaali #rashmikamandana pic.twitter.com/UotlV28SM8
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |