திருமணத்தின் பின்னரும் ஹொட் லுக்கில் அசத்தும் ராஷ்மிகா மந்தனா! குவியும் லைக்குகள்
திருமணத்துக்கு பின்னரும் செம ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள இணையத்தில் வைராலாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா
ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது ஷாஹித் கபூர் நடித்த காக்டெயில் 2 படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா ட்ரெண்டி லுக்கில் ஹாட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |