மோமோஸிற்கு ஆசைப்பட்ட சிறுவன்... பறிபோன 85 லட்சம்! நடந்தது என்ன?
சிறுவன் ஒருவன் மோமோஸ் பிரியராக இருந்த நிலையில், வீட்டிலிருந்து நகைகளை எடுத்து கொடுத்து மோமோஸ் சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோமோஸிற்கு ஆசைப்பட்ட சிறுவன்
இன்றைய காலத்தில் வெளிநாடுகளில் சாப்பிடும் உணவுகள், வெளிமாநிலங்களில் சாப்பிடப்படும் உணவுகள் அனைத்தையும் சாப்பிடுவதற்கு குழந்தைகள் அதிகம் ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் பீட்சா, பர்கர் இவற்றினைத் தொடர்ந்து மோமோஸ் வகைகளும் தற்போது சிறுவர்களுக்கு பிடித்த உணவாக மாறியுள்ளது.

இவ்வாறு மோமோஸிற்கு ஆசைப்பட்ட சிறுவன் ஒருவன் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேசம் Deoria நகரில் விம்லேஷ் என்பவர் வாரணாசி கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்துள்ளார். இவரது மகனுக்கு மோமோஸ் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

இதனால் மோமோஸ் சாப்பிட கடைக்கு சென்ற போது கடை உரிமையாளர்கள் 3 பேர் சிறுவனிடம் வீட்டிலிருந்து நகை எடுத்துக் கொண்டு வா... ஃப்ரியாக மோமோஸ் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
தினமும் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளான். சமீபத்தில் சகோதரி வீட்டிற்கு செல்ல வீட்டில் இருந்த நகை பெட்டியை எடுத்த போது அதில் உள்ள நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது.
விசாரித்த போது மகன் இவ்வாறு நகைகளை மோமோஸ் கடைக்காரர் மூன்று பேரிடம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது அந்த மூவரும் குறித்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளதால், தந்தை போலிகாரிடம் புகார் அளித்துள்ளார்.
மோமோஸிற்கு ஆசைப்பட்டு சிறுவன் இவ்வாறு செய்துள்ள காரியம் ஒவ்வொரு பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |