ஜோடியாக சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் அஸ்ஸா மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் எதிர்வரும் மே 1ஆம் திகதி திரைக்குவரவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பெரும் பொருட் செலவில் உருவான கங்குவா திரைப்படம் எதிர்பார்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கும் உட்பட்து.
அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ரெட்ரோ படம் அவரது கெரியரை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பு நிலவுகின்றது.
சூர்யா - ஜோதிகா சுவாதி தரிசனம்
இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
குறித்த புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பழமையான இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் ஒன்றாகும், இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
சூர்யாவின் படம் திரைக்கு வரவிருப்பதுடன் ஜோதிகா தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கும் நிலையில் குறித்த புகைப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
