rashmika mandanna: ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா அழகிய சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகனை குவித்து வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
இவருக்கு எல்லா மொழிகளிலும் பரவலாக ரசிகர் கூட்டம் இருக்கின்றது. ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவரை அனைவரும் நேஷனல் கிரஷ் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2', திரைகப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனை படைத்தது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ராஷ்மிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது காலில் அடிபட்டுவிட்டதால், அண்மைகாலமாக திரைப்பட புரமோஷன் நிகழ்வுகளில் கூட காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுனால்.
இந்நிலையில் தற்போது அழகிய ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வயைில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |