படவிழா மேடைக்கு நொண்டிக்கொண்டு சென்ற ராஷ்மிகா... குவியும் பாராட்டுக்கள்
நடிகை ராஷ்மிகா காலில் அடிபட்டு இருக்கும் நிலையிலும் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஒரு காலில் நொண்டிக்கொண்டே மேடைக்கு செல்லும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
தற்கால இளைஞர்களின் கனவு கன்னியாக வலம வரும் ராஷ்மிகாவை ரசிகர்கள் நேஷனல் கிரஷ் என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து தழிழிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இருப்பதுடன் இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக முதல் நிலை வகிக்கின்றது.
அடுத்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்துக்கொள்வதற்காக ராஷ்மிகா காலில் அடிபட்டு இருக்கும் நிலையிலும் தவறாமல் கலந்துகொண்டுள்ளார்.
அவர் ஒரு காலில் நொண்டிக்கொண்டே மேடைக்கு சென்று இருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இந்த நிலையிலும் அவர் படவிழாவில் கலந்துகொண்டு இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |