வீல் சேரில் பரிதாபமாக விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகா... வைரலாகும் காணொளி
நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு காரில் வந்திறங்கி ,தட்டு தடுமாறி ஒற்றை காலால் நொண்டி நொண்டி வீல் சேரில் உட்கார்ந்த காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவரை அனைவரும் நேஷனல் கிரஷ் என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2', திரைப்படம் வசூல் வெறியாட்டம் ஆடியது.
உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக புஷ்பா 2 மாறியுள்ளது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ராஷ்மிகா அண்மையில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது தனக்கு காலில் அடிபட்டுவிட்டதாக குறிப்பிட்டுடிருந்தார்.
இந்நிலையில் தற்போது விமான நிலையத்திற்கு காரில் வந்திறங்கிய அவர் தட்டு தடுமாறி ஒற்றை காலால் நொண்டி நொண்டி வீல் சேரில் உட்கார்ந்தார்.
அதனை தொடர்ந்து அவரது பணியாளர்கள் அவரை வீல் சேரில் அழைத்து செல்லும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமாகி நடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Rashu was spotted in a wheelchair at the airport due to a leg injury 🥺🫂
— Rashmika Lover's❤️🩹 (@Rashuu_lovers) January 22, 2025
We cannot see you in these conditions @iamRashmika 😩
Wishing her a speedy recovery 🙏🏻❤️#RashmikaMandanna pic.twitter.com/NgGiZHBwSw
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |