கிரிக்கெட் வீரருடன் காதலா...நடிகை ராஷ்மிகா
தனது அழகிய புன்னகையாலும் வசீகர முக பாவனையாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா. நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன் பின்னர் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்திலும் நடித்தார். இவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் புஷ்பா. தற்போது ஹிந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்த ராஷ்மிகா 2017 ஆம் ஆண்டு அவரை நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த திருமணத்தை ரத்து செய்தனர்.
பின்னர் கீதா கோவிந்தத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால், அதனை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது ஈர்ப்பு இருக்கிறதா? என கேட்டபோது, அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்துள்ளார்.
சுப்மன் கில்லும் ஏற்கனவே ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.