காதலருடன் ஒரே வீட்டில் வாழ்ந்த பிரபல நடிகை! தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
பிரபல நடிகை ரேஷ்மிரேகா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலருடன் ஒரே வீட்டில் நடிகை
ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நடிகை ரேஷ்மி ரேகா, தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர். அவர் சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து தங்குவதற்கு என்று வீடு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்து தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தனர்.
அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மர்மமான முறையில் ரேஷ்மி ரேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் மரணம்
இதுகுறித்து தகவலறிந்துவந்த பொலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடந்தி வைத்தனர்.
அதில் ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ளார். எனவே ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
