ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள குடும்பத்தை பற்றி கண்ணீர் விட்ட கிரிக்கெட் வீரர் ரஷித் கான்- முன்னாள் வீரர் அளித்த தகவல்!
ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் வெளியேறுவதற்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து, பல நாட்டு பிரபலங்களும், தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம். தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.