வீடே மணக்கும் கொத்தமல்லி ரசம் செய்ய இந்த 2 டிப்ஸ் போதும்
ரசம் தமிழர்களின் உணவில் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சளி, இருமலை விரட்டியடிக்கும் கொத்தமல்லி ரசம் மணமணக்க எப்படி செய்வது என சிலருக்கு சந்தேகம் இருக்கும்.
இதனை சரிச் செய்யும் வகையில் சூப்பரான ரசம் ரெசிபி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி - கரைச்சல்
- தக்காளிப்பழம் - 2
- பெருங்காயப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 3
- கொத்தமல்லி தழை
- கறிவேப்பிலை
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1.1 / 2 தேக்கரண்டி
- வெந்தயம் - 8 கொத்தமல்லி
ரசம் தயாரிப்பு முறை
முதலில் கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய்,சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மிக்ஸில் போட்டு அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் புளிக்கரைச்சல், கொத்தமல்லி தழை, தக்காளித்துண்டுகள்,கறிவேப்பிலை இவை யாவற்றையும் சேர்த்து நன்றாக கைகளால் கரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பிற்கு தேவையான பொருட்களை போட்டு புளிக்கரைச்சலை கடாயில் ஊற்றவும்.
ரசத்தை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான வெப்பநிலையில் வைக்கவும். ரசம் கொதி வரும் போது வீடே மணக்கும் வகையில் ஒரு வாசம் வரும்.
இப்படி வாசம் வர ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |