காபி குடித்தால் உடல் எடையை குறைக்கலாமா? மருத்துவ நிபுணரின் கருத்து
காபி குடித்தால் உடல் எடை அதிகரிக்காது என மருத்துவ நிபுணர் பரிந்துரைக்கிறார். இதை இந்த பதிவில் தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.
காபி
இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக மனிதர்கள் நோயினால் சிரமப்படுகின்றனர். இதே போல தான் உடல் எடை என்பதும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இதனால் உடல் எடையை குறைக்க மனிதர்கள் பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
இந்த உடல் எடையை காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
காபி குடிக்கும் போது ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், பஜ்ஜி போண்டா, பிஸ்கட் என்று ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு செய்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை வேகமாக குறையும்.
இதை காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து எடுத்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும்.
எலுமிச்சை காபி கலோரிகளை எரித்து உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எனவே காபியை உரிய முறையில் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.