ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் Blue Coral Snake... அழகை பார்த்து கிட்ட போயிடாதிங்க!
இலையின் மீது ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் Blue Coral Snakeன் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதைவிட பல மடங்கு அதிகமாக பாம்புகளின் காணொளிகளை பார்ப்பதற்கும், பாம்புகள் குறித்து அறிந்துக்கொள்வதற்கும் ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில், Blue Coral Snake-ஆனது அழகான ஆனால் அதிக விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பினமாக அறியப்படுகின்றது.
இந்த பாம்பு வகை தாழ்நில மற்றும் கீழ் மலைப் பகுதிகளில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் அதிகமாக வசிக்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல எலாபிட்களைப் போலவே, (அதாவது கொடிய விஷம் கொண்ட பாம்புகள்) இந்த வகை பாம்புகளின் முதன்மை உணவு ஆதாரமும் மற்ற பாம்புகள் தான். இவை பாம்புகளை உணவாக உண்ணும் தன்மை கொண்டது.
அவை பெரும்பாலும் காட்டுத் தளத்தில் உள்ள இலைக் குப்பைகளுக்கு இடையில் வாழ்கிறது.அதன் சிவப்பு தலை, வால் மற்றும் வயிற்றுப் பகுதியால் இது உடனடியாக அடையாளம் காணப்படுகிறது.
இந்த பாம்பு பொதுவாக தொந்தரவு செய்யும்போது ஓடிவிடும், ஆனால் மற்ற நேரங்களில் அதன் வால் ஒரு எச்சரிக்கையாக நிமிர்ந்து தரையில் சுருண்டு கிடக்கும். இது பெரும்பாலும் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகின்றது. ஆனால் இது கொடிய விஷ தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |