Bigg Boss Season 9: போட்டியாளராக களமிறங்கியுள்ள கேரளா மாடல்! யார் இந்த திருநங்கை அப்சரா சிஜே?
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
பிக்பாஸ் சீசன் -9
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பிக் பாஸ் பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்த சீனனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். கடந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.அதற்கு முதல் உள்ள 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அதே போன்று இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.
அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
இதில், போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்ட அப்சரா சிஜே யார் என்பது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் தேடுதல் மேற்கொண்டு வருகின்றார்கள்.
யார் இந்த அப்சரா?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே, மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவருவதுடன், மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார்.
மாடலிங் தவிர, சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்சரா சிஜே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா களமிறங்கியிருப்பது உலகமெங்கிலும் பரவலாக வசிக்கும் திருநங்கைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |