வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைய வைக்கும் திராட்சை ஜூஸ்!
திராட்சை
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று திராட்சைப் பழம். இப்பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவுச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது.
திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகை உண்டு. திராட்சை பழம் ஜூஸ் உடலுக்கு உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பானமாகும்.
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு பார்ப்போம் -
எலும்புக்கு
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சையில் உள்ள காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் போன்றவை எலும்புகளை வலிமையாக்கும். தேவையான நுண் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.
நோய் கிருமிக்கு
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவி செய்யும்.
களைப்பு நீக்க
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் ஏற்படும் சோர்வை போக்கும். மேலும், திராட்சை சாப்பிட்டால் உடலில் உற்சாகத்தை பெறுவீர்கள்.
மலச்சிக்கலுக்கு
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சையில் உள்ள உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவி செய்யும். மேலும், உங்கள் பைபர் உட்கொள்ளலை அதிகரிக்கச் செய்யும். இதனால், உங்கள் குடல் இயக்கங்கள் சீராகி மலச்சிக்கல் நீங்கிவிடும்.
உடல் கொழுப்பு கரைய
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், நம் உடம்பில் தமனிகளில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது.