நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! சரியான பாடம் கற்பித்த மக்கள்
நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபல நடிகர் வெளியிட்டுள்ள புகைப்படம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தக்க பாடம் புகட்டியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரன்வீர் சிங்
வித்யாசமான உடை அலங்கரத்திற்கு பெயர் போன பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வந்தவர்.
சமீபத்தில் இவர் கொடுத்தபோஸ் இவரது இமேஜை டோட்டலாக காலி செய்து விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரன்வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அந்த போஸ்டுடன் பர்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிர்வாண போஸ்களை கொடுத்ததாகவும் எழுதியிருந்தார்.
தற்போது நடிகர் ரன்வீர் சிங்கின் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் பெண்களின் மனம் புண்படும் விதமாக ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடம் கற்பித்த மக்கள்
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் ஒன்று தோன்றியுள்ளது. ஒரு குழு ஆடை நன்கொடை இயக்கத்தை துவங்கி தெருவில் உள்ள மேசையில் ரன்வீர் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியை வைத்துள்ளது.
மக்கள் தங்கள் ஆடைகளை நன்கொடையாக வழங்குவதை அந்த குழு வீடியோவும் எடுத்துள்ளது. அந்த பெட்டியில் ரன்வீரின் நிர்வாண போஸ் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Clothes donation drive held for #RanveerSingh in Indore. pic.twitter.com/jxmInVztVc
— Tari Poha (@Alone_Mastt) July 26, 2022