ரஞ்சி கோப்பை அணியில் இடம்பிடித்த அமைச்சர் மனோஜ் திவாரி - பூரித்துபோன ரசிகர்கள்;
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியில், விளையாட்டு துறை அமைச்சர் மனோஜ் திவாரி இடம்பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான ரஞ்சி கோப்பை வரும் 13-ம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது.
இதில் தமிழக அணி பி பிரிவில் கர்நாடகா, உ.பி. ரயில்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை அறிவித்துள்ளது.
தற்போது பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அணி தேர்வில ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆம், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக இடம்பெற்றுள்ள மனோஜ் திவாரி, தற்போது மேற்கு வங்க ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவர், அமைச்சராக இருப்பதற்கு முன்பே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடைசியாக கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் கடைசியாக ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.
இதுகுறித்து பேசிய மனோஜ் திவாரி, தலமைச்சர் ஓப்புதல் வழங்கியதை அடுத்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிவித்தார்.
கிரிக்கெட் எனது வாழ்க்கையுடன் இணைந்தது என்று குறிப்பிட்ட திவாரி, அதனால் தான் அரசியலுக்கு வந்தும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்தார்.