ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் கர்ப்பிணி பெண்கள் உணவில் செய்யக்கூடாத தவறுகள்
ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. ரமலான் மாதத்தில் மக்கள் கடவுளை வணங்கி நோன்பு நோற்கிறார்கள். இது சாதாரண மக்களுக்கு எப்படி இருந்தாலும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சவாலாக இருக்கின்றது.
கர்ப்ப காலத்தில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் ஓய்வு தேவை. இந்த நேரத்தில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில பெண்கள் உண்ணாவிரதத்தின் போது மிகவும் பலவீனமாக உணர்கிறார்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென குறையக்கூடும், இது தலைச்சுற்றல், தலைவலி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். எனவே இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் செய்யகூடாத தவறுகள்
தண்ணீர் குடிக்காமல் இருப்பது: கர்ப்ப காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் அதிக பாதிப்பு உள்ளது. தண்ணீர் குறைவாக குடிப்பதால் மலச்சிக்கல்தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும். இப்தார் மற்றும் சேஹ்ரியின் போது குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.
சமச்சீர் உணவு தவிர்ப்பது: இப்தாரின் போது சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். பல பெண்கள் வறுத்த உணவை மட்டுமே சாப்பிட்டுவது உண்டு. ஆனால் இந்தப் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும்நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக சக்கரை மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்ளல்: நோன்பை முடித்த பிறகு அதிக இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவது திடீரென சர்க்கரை அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வழிவகுக்கும்.
இதனால் சோர்வு மற்றும் சோம்பலாக உணர்வீர்கள். அதற்கு பதிலாக, பழங்கள், முழு தானிய உணவுமுறையை கடைபிடிப்பது நல்லது.
அதிக நேரம் பசியுடன் இருப்பது: கர்ப்ப காலத்தில் உடலுக்கு வழக்கமான ஊட்டச்சத்து தேவை. இப்தாருக்குப் பிறகு சேஹ்ரியைத் தவிர்ப்பது அல்லது தாமதமாக சாப்பிடுவது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
இதனால் பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒரு முறை ஆரோக்கியமான சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
