நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சிறப்பாக நடக்க போகும் திருமணம்! எங்கு தெரியுமா?
நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ற்கு எதிர்வரும் 21 ம் திகதி கோவாவில் திருமணம் கோலாகலமாக நடக்கவிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான கில்லி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
இதற்கு பின்னர் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் இவர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
தற்போது ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானிக்கும் எதிர் வரும் 21ம் திகதி திருமணம் நடக்கிருக்கிறது தெரியவந்துள்ளது.
காதலில் விழுந்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் தம்பதிகளாக இணையவுள்ளனர், மூன்று தினங்கள் கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ளது.
தனக்கு நடிப்பு என்றால் என்ன என்பது கூட தெரியாது, கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது கார் ஒன்று வாங்குவதற்காக நடிக்க சென்றேன் என பேட்டியொன்றில் அவரே கூறியுள்ளார்.
மேலும் அவ்வாறு நடிக்க வந்த படம்தான் கில்லி, இந்த படத்தின் மூலம் தான் சினிமாவை பற்றி கற்று கொண்டேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |