இப்படியும் ஒரு ஆடையா? இணையத்தை ஆக்கிரமிக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் New look!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவில் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே அயலான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்ட,ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், கடைசியாக இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |