நடிகை ஹன்சிகா மோத்வானியா இது? இவ்வளவு ஒல்லியாக மாறிட்டாங்களே!
ஹன்சிகா மோத்வானி ட்ரெண்டிங் லெகங்காவில் படு ஒல்லியாக தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ஹன்சிகா மோத்வானி
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. வட இந்தியாவைச் சேர்ந்த இவர், 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.
அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், விஜய் நடிப்பில் வெயளியான வேலாயுதம், புலி, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
திரையுலகில் அறிமுகமான புதிதில், ஹன்சிகா சற்று பருமனாக தோற்றத்தில் காணப்பட்டார். ரசிகர்கள் அவரை செல்லமாக "குட்டி குஷ்பு" என்றும் அழைத்தனர். ஆனால், சமீப காலங்களில் அவர் தனது உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் போது, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு குடும்ப பெண்ணாக மாறினார்.
திருமணமான பின்னரும் சினிமாவில் குறிப்பிட்ட சில கதாப்பாத்திரத்தை தெரிவு செய்து நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் லெகங்கா அணிந்து ஒல்லியான இடையழகை காட்டி தற்போது ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |