ப்ரெய்ன் ட்யூமரால் உயிரிழந்த இந்தி பிரபலத்தின் தாயார்! கண்கலங்க வைத்த வீடியோ காட்சி..
பிரபல நடிகை ராக்கி சாவந்த்தின் தாயார் கென்சர் நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சினிமா பயணம்
பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ராக்கி சாவந்த். இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் இல்லாவிட்டாலும் இவரின் கவர்ச்சிக்கான ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்.
இவர் சினிமாத்துறை மட்டுமன்றி அரசியல், நாட்டியக் கலைஞர், அழகுப் பதுமை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உள்ளிட்ட துறைகளில் தங்களின் முழு பங்களிப்பையும் கொடுத்து பணியாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர் இந்தித் திரைப்படங்கள் உட்பட, கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து தனிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
காதல் திருமணம்
இதனை தொடர்ந்து ராக்கி சாவந்த் அடில் கான் துரானி என்பவரை நீண்டக்காலமாக காதலித்து வந்துள்ளார். இவரின் திருமணத்தில் ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டதால் இவர்களின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் திருமணம் செய்துக் கொண்டு புகைப்படத்தை மாத்திரம் வெளியிட்டிந்தார்.
இந்த நிலையில் இவர் மராத்தி மொழியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்றியாக பிக் பாஸ் வீட்டிற்குள் உள்நுழைந்தார்.
தொடர்ந்து டாஃப் போட்டியாளர்களில் ஒருவராக வந்த ராக்கி தனக்கான ஆதரவு குறைவாக தான் இருக்கும் என அறிந்துக் கொண்டு, பணப்பெட்டி வைக்கப்பட்டவுடன் 9 லட்சம் ரூபாய் ஆக உயர்ந்துக் கொண்டிருந்தது, அதனை புத்திசாலித்தனமாக எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
தாயார் திடீர் மரணம்
இதனையடுத்து வெளியேறிய ராக்கி சாவந்த் அம்மா “ப்ரெய்ன் ட்யூமரால்” மிகவும் தீவிரமாக சிகிச்சையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அம்மாவின் இந்த நிலையை அறிந்த ராக்கி சாவந்தின் ரசிகர்களிடம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுமாறு பகிர்ந்திருந்தார். இவ்வாறு கொஞ்ச நாள் கழித்து எல்லோருக்கும் இவரை காப்பாற்ற முடியாது என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இவர் தாயார் ஜெயா பேடா சிகிச்சை பலன் இன்றி நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்த சோகத்தை தாங்க முடியாமல் ராக்கி ரசிகர் முன் கதறி அழுதுள்ளார்.
மேலும் இவரின் தாயாரின் மரணத்திற்கு சினியுலகமே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.