பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் தனது 57 ஆவது வயதில் இன்று உயிரிழந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் திகதி பிறந்தவர் தான் மயில்சாமி.
சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அப்போதே மேடை நாடகங்களில் நடித்து 1985ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
இவர் கன்னிராசி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுக்கு இணையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்.
நாளடைவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இவர் கடைசியாக நடித்து திரைப்படம் தி லெஜண்ட் திரைப்படம் தான். மேலும், இவர் காமெடி நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.
மரணம்
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவை சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.