51 வயதான யோகி காலில் விழுந்த ரஜினி: சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ
சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினி உத்தரபிரதேச முதல்வரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இமயமலைக்கு சென்ற ரஜினி
சினிமாவில் தற்போதும் இளமை மாறாமல் துடிப்புடன் படங்களில் நடித்து வரும் ரஜினி இறுதியாக நடித்திருந்த திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகியிருந்தது.
ஆனால் ரஜினி ஆகஸ்ட் 9ஆம் திகதியே இமயமலைக்கு பயணம் செய்திருக்கிறார். 4 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இமய மலைக்கு செல்லவில்லை அதனால் இந்த வருடம் சென்றாக வேண்டும் என்று பயணமாகியிருந்தார்.
இமயமலைக்கு சென்று தயானந்த சரஸ்வதி ஆசிரமம், பாபா குகை போன்ற இடங்களுக்கு சென்று வழிபாடுகளை செய்திருக்கிறார்.
யோகி காலில் விழுந்த ரஜினி
ஆன்மீக சுற்றுலாவை முடித்தப் பிறகு ஜார்கண்ட் பகுதியிற்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து விட்டு அடுத்த கட்டமாக உத்தரபிரதேசத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கு சென்று உத்தரப்பிரதேச முதல்வரை நேரில் சந்திக்க சென்ற போது 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றது.
தன்னை விட 21 வயது இளையவரின் காலில் விழுந்த இந்த சம்பவத்திற்கு பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இவர் தமிழகத்தின் மானத்தை அடமானம் வைக்கிறார் என்றும் பலரும் சாடிவருகிறார்கள்
#WATCH | Actor Rajinikanth meets Uttar Pradesh CM Yogi Adityanath at his residence in Lucknow pic.twitter.com/KOWEyBxHVO
— ANI (@ANI) August 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |