மீனா அழகைப் பார்த்து நான் அப்படியே அசந்துட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்
முதன் முதலாக நான் நடிகை மீனாவின் அழகைப் பார்த்து நான் அசந்துவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’, ‘தலைவா’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் டிப்ளமோ படிப்பதற்காக மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அங்குதான் பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்த்தை கண்டுபிடித்தார்.
இதனையடுத்து, 1975ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினி. கிட்டத்தட்ட சினிமா வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு பத்ம பூஷன், 2016ம் ஆண்டு பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்
சமீபத்தில் நடிகை மீனாவிற்கு சினிமாவில் வந்து 40 ஆண்டுகள் நிறைவையொட்டி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீனாவை குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் 169 படங்களில் நடித்துள்ளேன். 50 படங்களில் வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளேன். 110 படங்களில்தான் நான் கதாநாயகிகளுடன் நடித்தேன். அதில் 5, 6 கதாநாயகிகள் 6 படங்களில் என்னுடன் நடித்துள்ளார்கள். அதில் எனக்கு ரொம்ப பிடித்த கதாநாயகிகள் 2 பேர். அதில் ஒன்று ஸ்ரீதேவி, இன்னொருவர் மீனா.
‘எங்கே கேட்ட குரல்’ படத்தில் மீனாவிற்கு 7 வயது இருக்கும். அப்படத்தில் எனக்கு மகளாக நடித்தாங்க. அடுத்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனாவைப் பார்த்தேன். அப்படத்தில் மாமாவாக நடித்தேன். அடுத்ததாக நான் ‘எஜமான்’ படம் பண்ணலாம்ன்னு பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன். யாரு ஹீரோயின்னு. மீனா என்று சொன்னாங்க. நான் எந்த மீனாவென்று கேட்டேன்.
உடனே, என்னை கூட்டிக்கொண்டு போய் மீனா நடித்த இரண்டு தெலுங்கு படத்தில் இடம் பெற்ற பாடலை போட்டு காட்டினார்கள். அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன். நான் பார்த்த குட்டி மீனாவா இது. ரொம்ப அழகா ஆயிட்டாங்க. முதல் நாள் ஷூட்டிங். எஜமான் படத்தில் மீனாவை பொண்ணு பார்க்க நான் போகிறேன். மீனா என் முன்னாடி வரவே மாட்றாங்க. அப்படி ஒரு வெட்கம். எப்படியோ அந்தப் படத்திலும் நடித்து முடித்துவிட்டோம்.
மீனாவை ரொம்ப திறமையானவங்க. ரொம்ப நேர்மையானவங்களும் கூட. அவளுங்களுடைய உயர்ந்த எண்ணம்தான் அவங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது. எங்கள் வீட்டில் என்ன விசேஷம் இருந்தாகூட மீனாவும், அவங்க அம்மாவும் வந்து கலந்துப்பாங்க என்று ரஜினி நெகிழ்ச்சியோடு பேசினார்.