அனிருத் திருமணத்தில் மாஸ் காட்டிய ரஜினி - நடன வீடியோ வைரல்!
Rajinikanth Hits the Dance Floor at Anirudh’s Wedding: இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் நேற்று மிகப் பிரம்மாண்டமாக கிரீஸ் நாட்டில் நடந்துமுடிந்துள்ளது.
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்ட இந்தத் திருமண நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
திருமண விழாவில் நடனமாடிய ரஜினிகாந்த்
இந்தத் திருமண நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் ரஜினிகாந்தின் நடனம்தான்.
வழக்கமாகத் தனது ஸ்டைல் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவரும் ரஜினிகாந்த், இந்த முறை திருமணக் கொண்டாட்டத்தில் தனது நடனத்தால் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் மற்றவர்களுடன் இணைந்து அவர் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் குறிப்பாக, அனிருத் இசையமைத்த 'மரணம் மாஸ் மரணம்' பாடல் ஒலிக்க, அதற்கேற்ப ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடிய காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வயது வித்தியாசமின்றி உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரஜினியின் இந்த நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Superstar Rajinikanth dancing in Anirudh wedding 🕺🏻 https://t.co/jfB5KAU6Sn
— ORCHESTRAL GURL 🐥 (@metroproposal) November 11, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |